Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

உடலில் சேரும் அதிகமான கொழுப்பைக் கட்டுப்படுத்த இத ட்ரை பண்ணுங்க!

A
Admin User
Journalist
January 18, 2023 1 min read 39 views
உடலில் சேரும் அதிகமான கொழுப்பைக் கட்டுப்படுத்த இத ட்ரை பண்ணுங்க!

Healthy tips to control high cholesterol: உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு இதய நோய் முதல் பல்வேறு பிரச்சனைகளுக்கு உண்டு பண்ணக்கூடும். எனவே, உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பது அதிகமாகி விட்டதால், உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து விட்டது. இப்போது, உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் சில எளிய குறிப்புகளை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியமான உணவு

ஓட்ஸ், கிட்னி பீன்ஸ், ஆப்பிள் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ்களில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்கிறது. பால் பொருட்களில் உள்ள புரதம், நல்ல கொழுப்புச்சத்து மற்றும் உடலின் மொத்த கொழுப்பையும் குறைக்கும்.

மது அருந்த கூடாது

உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது பற்றிய கவலை இருந்தால் முதலில் மது அருந்தும் பழக்கத்தை கை விட வேண்டும். உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்க மது அருந்துவதும் ஒரு காரணமாகும். எனவே, இன்றே மது பழக்கத்தை கைவிடுங்கள்.

அதிகப்படியான வியர்வைக்கு இது கூட காரணமா இருக்கலாம். உடனே இத ட்ரை பண்ணுங்க…

உடல் எடை குறைக்கவும்

கொழுப்பின் அளவை குறைக்க வேண்டுமெனில், முதலில் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும். உடல் எடை அதிகரிப்பது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும். இது உங்கள் தமனிகள் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கும். உடல் எடையை குறைக்க, பழங்கள், காய்கறிகள், நட்ஸ், சீட்ஸ், முழு தானியங்கள் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். தினந்தோறும் உடற்பயிற்சி செய்து, போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

புகை பிடிக்கக் கூடாது

புகைபிடித்தல் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்க செய்திடும். புகையிலை பழக்கத்தைக் கைவிடுவது கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்திடும்.

தினமும் உடற்பயிற்சி செய்யவும்

தவறாமல் உடற்பயிற்சி செய்வது உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவும். ஜிம்மிற்கு செல்லலாம் அல்லது வீட்டிலேயே கூட உடற்பயிற்சி செய்யலாம். இது உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, கொழுப்பின் அளவும் கட்டுப்படுத்தப்படும். நீங்கள் தியானம், யோகா மற்றும் உடல் செயல்பாடுகளை முறையாக செய்ய வேண்டும்.

உடல் எடை குறைக்கனும்னா மதியம் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…

வெறும் வயிற்றில் இந்த இலையோட ஜூஸ் குடிச்சீங்கனா சிறுநீரக பிரச்சனை வரவே வராதாம்…

ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க இந்த யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் போதும்…

VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women
Recommended for You
VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,567
தங்கம் (24k)
1 கிராம்
₹15,891
வெள்ளி
1 கிராம்
₹275
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க